சிக்கலான படத்தால், சிக்கலில் மாட்டிய இலங்கை கிரிக்கேட் வீரர்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களில் ஒருவர் குஷல் ஜனித் பெரேரா. எல்லா போட்டிகளிலும் பிரகாசிக்காத போதிலும், அப்பப்போது எதையேனும் செய்து அதாவது அதிரடியாக ஆடி பெயரைக் காப்பாற்றிக்கொள்வார். அதிரடி வீரராக அறியப்படும் இவர் , அதிரடியான சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்.

kushal-janith-pereraa

ஆம், கட்டிலில் பெண்ணொருவருடன் இருந்தவாறு அவர் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படும் அந்தரங்க செல்பியொன்று தற்போது இணையத்தில் உலா வருகின்றது.

படத்தைப் பார்த்த பலரும் , இது குஷாலே என்பதை இலகுவாக அடையாளங் கண்டு கொண்டதுடன், அதிர்ச்சியும் அடைந்திருந்தனர்.

வெளிநாடுகளில் , குறிப்பாக இந்தியாவில் இவ்வாறு பல்வேறு பிரபலங்களின் படங்கள் வெளியாகுவது வழமை. அடிக்கடி ‘வட்ஸ்எப்பின்’ ஊடாக இத்தகைய படங்கள் , காணொளிகள் வெளியாகுவது வழக்கம். ஏன், ‘வட்ஸ் எப்’ இல்லாத காலத்திலேயே பிரபல நடிகையொருவரின் குளியல் காட்சியை இணையத்தில் பரவ விட்ட வரலாறு இந்தியாவிற்கு உண்டு.

இலங்கையில் இத்தகைய செயற்பாடுகள் குறைவு என்பதால் , அதுவும் நாட்டில் பெரிதும் மதிக்கப்படும் கிரிக்கெட் வீ ர ர் ஒருவர் இப்படியான சர்ச்சையில் சிக்குவது சற்று புதிதென்பதாலும் , பார்த்த பலரின் கண்களை விட்டகலவில்லை அப்படம்.

இது தொடர்பில் குஷல் ஜனித் பெரேரா கருத்து வெளியிடுகையில்…

இப்படத்தில் இருப்பது தான் எனவும் ஆனால் பெண்ணொருவருடன் இருப்பது போல கணனியின் ஊடாக இணைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இப்படத்தை இணையத்தில் கசிய விட்டவரை தேடிவருவதாகவும் , ஆனால் இவ்வாறு படத்தை இணைத்தவரை தான் அடையாளங் கண்டுகொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Posts