இலங்கையில் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாயின் இனி தேசிய அடையாள அட்டை சமர்பிக்கவேண்டியது கட்டாயமாக்கப்படவுள்ளது.
சார்க் பிராந்திய வலய நாடுகளில் வாழும் மக்களின் ஒரே விதமான தோற்றத்தைக் கொண்டுள்ளமையால் வெளிநாட்டு நபர்கள் இலங்கை வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றதுடன் வைத்தியசாலை நலன்களை சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே வெளிநபர்கள் உள்நாட்டு மருத்துவ சேவையின் நன்மைகள் அனுபவிப்பதனை தடுக்கும் நோக்கில் எதிர்காலத்தில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அனைவரும் தங்களது தேசிய அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.