சிகரெட் ஒன்றின் விலை 55 ரூபாவாக அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தற்பொழுது அமைச்சரவையினால் ஒரு சிகரெட்டின் விலை 7 ரூபாவினால் உயத்தப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து எதிர்வரும் நாட்களில் ஒரு சிகரெட்டின் விலை 15 வீத வரியினால் அதிகரிக்கப்படும்.
தற்பொழுது சிகரெட் ஒன்று 42 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. பீடி, சுருட்டு என்பனவற்றுக்கான விலை அதிகரிக்கப்பட வில்லையெனவும் தெரிவித்துள்ள அமைச்சர் ராஜித, சிகரெட் விலை அதிகரிப்பினால் அதன் பயன்பாட்டில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.