புகையிலை சிகரெட்டை புகைப்பவர்கள் அனைவரும் இலத்திரனியல் சிகரட்டிற்கு மாறும் பட்சத்தில் பல இலட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியுமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
இலத்திரனியல் சிகரட் என்பது புகையிலை சிகரட்டிற்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள சிகரட்டாகும். இந்த சிகரட்டை புகைப்பவர்கள் ஆவியாக்கப்பட்ட திரவு நிக்கெற்றினை உள்ளெடுக்கிறார்கள். இது புகையிலை சிகரட்டில் உள்ள விஷத்தன்மை வாய்ந்த இரசாயனங்களை போலல்லாமல் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்துகிறது.
உலகெங்கிலும் புகையிலை சிகரெட் பாவனையால் வருடமொன்றுக்கு 50 இலட்சம் பேர் மரணத்தை தழுவுகிறார்கள். ஈ-சிகரட் எனப்படும் இலத்திரனியல் சிகரட்டின் பாவனை இந்த எண்ணிக்கையை வெகுவாக குறைக்குமென்பது விஞ்ஞானிகள் நம்பிக்கை.