சிகரெட்டின் விலை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும்!

2020ஆம் ஆண்டளவில் புகையிலை உற்பத்தியானது முற்றாக தடை செய்யப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், புகையிலை உற்பத்தியின் மீதான வரி 90 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக இலங்கையில் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை 48 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் சிகரெட் விற்பனை தடை செய்யப்படும் எனக் கூறிய ராஜித, சிகரெட் பக்கற் ஒன்றின் விலையை ஆயிரம் ரூபாவாக உயர்த்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts