சிகரட் மீது வெறுப்பு ஏற்படுவதற்காகவே வரி அதிகரிப்பு

புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாட்டை தடுப்பதில் இலங்கை பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

மது, புகையில் உள்ளிட்ட ஏனைய போதைப் பொருள் பயன்பாடுகளில் இருந்து விடுபட்ட வாழ்கை ஒன்றை அனைத்து இலங்கையர்களுக்கும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டி, மஹவலி ரிஷ் ஹோட்டலில் இடம்பெற்ற மது, புகையில் உள்ளிட்ட ஏனைய போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிரான சர்வதேச கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

சிகரட் பெட்டிகளின் 80 வீதமாமான பகுதிகளில் படங்கள் மூலமான எச்சரிக்கையை வௌியிடுவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்க முடிந்ததற்கு பாராட்டுக்களை தெரிவித்த ஜனாதிபதி, அண்மையில் சிகரட்டுக்கள் மீதான வரியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும், அது சிகரட் பயன்பாடு மீது வெறுப்பு ஏற்படுவதற்கான நடவடிக்கை என்றும் ஜனாதிபதி கூறினார்.

21ம் நூற்றாண்டில் போதை ஒழிப்பு மற்றும் கொள்கை இலக்குகளை நோக்காகக் கொண்டு நடைபெறுகின்ற இம்மாநாட்டில் 23 நாடுகளைச் சேர்ந்த 93 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இம்மாநாடு எதிர்வரும் 04ம் திகதி வரை இடம்பெற உள்ளது.

Related Posts