சாவகச்சேரி வைத்தியசாலைக்குத் தற்காலிக மின்பிறப்பாக்கி கையளிப்பு!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குத் தற்காலிக மின்பிறப்பாக்கி வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அங்கஜன் இராமநாதன் மேலும் தெரிவித்துள்ளதாவது”

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கான மின்சார மாற்றீடுகள் (Power Backup) இல்லாத நிலை தொடர்பில் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்தது.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் 150kVA வலுவுடைய மின்பிறப்பாக்கியொன்று தற்காலிக அடிப்படையில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்த மின்பிறப்பாக்கியை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் பொறுப்பேற்றுக் கொண்டார்”எனத் தெரிவித்தார்.

அத்துடன் நிரந்தர மின்பிறப்பாக்கியைப் பெற்று வைத்தியசாலையில் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாகவும், அதற்கான அறையொன்றை (Generator Room) அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் தெரியப்படுத்தினார் என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

Related Posts