சாவகச்சேரி பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை இன்றைய தினம், நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த விவகாரம் தொடர்பில், எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடப்போவதாகவும் குறிப்பிட்டார்.
நிதி அமைச்சுக்கான புதிய கட்டடத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.