சாவகச்சேரி பொலிஸூக்கும் மக்களின் காணிகள் பறிப்பு !

ARMY-SriLankaகாணி சுவீகரிப்பு ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு தனியார் காணி சுவீகரிக்கப்படவுள்ளது. இது தொடர்பான மும்மொழிகளில் வெளியிடப்பட்ட அறிவித்தல்கள் நேற்று வியாழக்கிழமை காணியின் முன்னால் ஒட்டப்பட்டுள்ளது.

சாவகச்சேரி கோயிற்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் கச்சாய் வீதியில் உள்ள 140 பேர்ச் காணியே சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணியின் நான்கு பக்க எல்லைகள் பற்றிய விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்து வெளி நாடொன்றில் தங்கியுள்ள ஒருவரின் பெயரில் உள்ள காணியே இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளது. இவரது காணிக்கு அருகில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிலேயே உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts