சாவகச்சேரி பிரதேச சபையால் ரூ.310 மில்.செலவில் அபிவிருத்தி; பணிகளை மேற்கொள்ள முன்மொழிவுகள்

சாவகச்சேரி பிரதேச சபையால் அடுத்த வருடத்தில் பிரதேசத்தில் 310 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்வதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மாகாணம் குறித்தொதுக்கப்பட்ட நிதியில், 308 மில்லியன் ரூபா செலவில் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளவும், சபை நிதியிலிருந்து 21 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா செலவில் மேற்கொள்ளவும் யுனிசெப் செயற்திட்டத்தின் கீழ் வேம்பிராயிலிருந்து வரணி வரை குடிதண்ணீர்த் திட்டத்தை மேற்கொள்ளவும் திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மாகாணம் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியில் கல்வளை பிள்ளையார் ஆலய வீதி, தட்டாங்குள வீதி, மருதங்குள வைரவர் ஆலய வீதி, ஒல்லாந்தர் வீதி, மிருசுவில் கெற்பேலி உசன் இணைப்பு வீதி, நாவலடி ஆலடி வீதி, சரசாலை மத்தி சனசமூக நிலைய வீதி, கச்சாய்துறைமுக வீதி ஆகியவை புனரமைக்கவும் நாவற்குழி பாடசாலை வீதி, வரணி இந்துமயான மடம் கிணறுவீதி, சிலுவன் மயான மடம் கிணறு வீதி, கைதடி நவபுரம் சனசமூக நிலைய கலாசார மண்டபம், கைதடி தெற்கு சனசமூக நிலையம், கோயிலாமனை எல்லைச்சுவர் ஆகியவை நிர்மாணிக்கவும் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சபை நிதியில், குடமியன் மயான எரி கொட்டகை, வரணி வடக்கு வீதி, கைதடி பிராயன்கலட்டி கிணறு சுற்றுமதில், கச்சாய் சாளம்பன் தீவுக் கிணறு, கொடிகாமம் சந்தை மலசலகூடத் திருத்தம், பழைய தலைமை அலுவலகத் திருத்தம், நாகமணி வீதி திருத்தம், கைதடி கிழக்கு சனசமூக நிலைய மேடை, புதிய தலைமை அலுவலக மலசலகூடம் அமைத்தல், நாவற்குழி பிணமுழுங்கை மயான எரிகொட்டகை, பிளாஸ்ரிக், கண்ணாடி சேகரிப்பு நிலையம், நாவற்குழி உப அலுவலக வேலி, ஆஞ்சநேயர் ஆலய வீதி, கந்தசாமி ஆலய வீதி திருத்தம், வீரபத்திர ஆலய குழாய்க்கிணறு ஆகிய வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளவும் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

Related Posts