சாவகச்சேரி சம்பவத்தை சிறிதாக நினைக்காதீர்கள்! பீரிஸ்

சாவகச்சேரி பகுதியில் ஜெகட் இரண்டு, சீ நான்கு (பிளாஸ்டிக் வெடிபொருள்) பேக் மூன்று மற்றும் சிம் காட் ஐந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தற்போது அரசாங்கம் முயற்சிப்பது உண்மையை மறைத்து இது குறித்து குறைந்த மதிப்பீடுகளை வழங்கவே எனவும் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆனால் இது உண்மை நிலை எனவும், எனவே உண்மையை மறைக்க முற்படாது அதனை தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் ஆரம்பம் என்ன? இதன் பின்னணி என்ன? இவர்கள் செய்ய எதிர்பார்த்தது என்ன? இதனை வெல்லவத்தைக்கு அனுப்புவதாயின், கொழும்புக்கு அனுப்புவதாயின் செய்ய இருந்த மோசம் என்ன? என்பது தொடர்பில் அரசாங்கம் விரைவில் வௌிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தற்போது கூறுவது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளப் பெறவே, அவை அனைத்தையும் விட நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பீரிஸ் மேலும் கூறியுள்ளார்.

எனவே சாவகச்சேரி சம்பவத்தை சிறிதாக நினைக்க வேண்டாம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts