சாவகச்சேரியில் வீட்டுத்திட்டத்தைப் பெறுவதில் சிரமம்

சாவகச்சேரி பகுதியில் வீட்டுத்திட்டப் பயனாளிகளாக தெரிவுசெய்யப்பட்டவர்கள் வீடுகளைப் பெற்றுக் கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொண்டவர்கள், தற்போது வசிக்கும் வீட்டின் முன்னால் குடும்பமாக எடுத்த புகைப்படத்தை வழங்குமாறு பிரதேச செயலகத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன்,வீட்டுத்திட்டப் பணிகளுக்கான பணத்தை வைப்பிலிடுவதற்காக பயனாளிகளின் தேசிய சேமிப்பு வங்கி கணக்கு இலக்கம் போன்றனவற்றை வழங்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் பயனாளிகள் சிலர் வீட்டுத்திட்ட அளவுப்பிரமாணம் மற்றும் வீட்டின் வடிவம் என்பவற்றில் மாற்றம் ஏற்படுத்துவதற்கென கோரிக்கை விடுத்தபோதும் பிரதேச செயலகம் அதனை நிராகரித்துள்ளதாக பயனாளிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Related Posts