சாவகச்சேரியில் மூதாட்டியின் சடலம் மீட்பு!

சாவகச்சேரி பகுதியில் மூதாட்டி ஒருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி புகையிரத நிலைய வீதியில் தனித்து வசித்து வரும் நாகேஸ்வரி மகாதேவா (வயது 73) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சம்பவம் பற்றித் தெரியவருவதாவது:-

வீட்டின் வாசல் கதவு திறக்கப்பட்டிருந்தும் வீட்டு படலை பூட்டப்பட்டிருந்த நிலையில் ஆள்நடமாட்டம் இல்லாததால் அயலவர்கள் தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தியபோது மறுமுனையில் தொலைபேசி ஒலித்ததே தவிர எவரும் பதிலளிக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அயலவர்கள் கிராம அலுவலருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அயலவர்களுடன் அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மூதாட்டி காயங்களுடன் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதையடுத்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அங்கு வந்து சடலத்தை மீட்டனர். அவரது காதில் இருந்த தோடு கழற்றப்பட்டிருந்ததுடன் வீடு முழுவதும் தேடுதல் நடத்தப்பட்ட தடயங்கள் காணப்படுகின்றன என அயலவர்கள் தெரிவித்தனர்.

Related Posts