சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிபொருட்களில் உள்ளடங்கியிருந்த சி-4 பிளாஸ்டிக் வெடிமருந்து, மிகவும் பழைமையானது என்றும், அது வெடிக்கும் திறனை இழந்து விட்டதாகவும், காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர,
சாவகச்சேரி- மறவன்புலவில் உள்ளிட்ட வீட்டில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்களில், மூன்று பொதிகளில் 10 கிலோ சி-4 பிளாஸ்டிக் வெடிமருந்தும் காணப்பட்டது.
இது மிகவும் பழைமையானது. வெடிப்பதற்கான வேதியல் ரீதியான திறனை இழந்து விட்டது என்று குறிப்பிட்டார்.
மீட்கப்பட்ட வெடிபொருட்கள் அரச இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த, காவல்துறை பேச்சாளர், தீவிரவாத விசாரணைப் பிரிவினர் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் எந்த தகவலலையும் வெளிப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.