சாவகச்சேரியில் நினைவுத் தூபி அமைக்க நடவடிக்கை

உள்நாட்டு யுத்தத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்த பொதுமக்களின் நினைவாக, சாவகச்சேரி பொதுச்சந்தையில் தூபியொன்று கட்டியெழுப்பப்படவுள்ளதாக சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் அ.பாலமயூரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் இனப்படுகொலை நினைவு வாரத்தின் மூன்றாம் நாள் அஞ்சலி நிகழ்வுகள் நேற்று (திங்கட்கிழமை) மாலை சாவகச்சேரி சந்தையில் இடம்பெற்றபோதே இதனைத் தெரிவித்தார்.

சாவகச்சேரி நகர சபையின் தலைவர் சிவமங்கை இராமநாதனின் கருத்திட்டத்துக்கு அமைவாக, இந்நினைவுத் தூபி கட்டியெழுப்பப்படுவதற்குப் பொருத்தமான இடமொன்றைத் தெரிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து உரிய அனுமதிகளுடன் இந்நினைவுத் தூபி வெகுவிரைவில் கட்டியெழுப்பப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts