சாவகச்சேரியில் தற்கொலை அங்கி; தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை

சாவகச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்களால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படப்போவது இல்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பிற்கும் சில இடங்களில் கண்டுப்பிடிக்கப்படும் பொருட்களுக்கும் நிறைய இடைவெளி காணப்படுவதாக குறிப்பிட்ட அவர், இதற்கு முன்னரும் இவ்வாறான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கடந்த பல வருடங்களாக தினமும் இவ்வாறான பொருட்கள் கண்டெடுக்கப்படுவது, சிலர் கைது செய்யப்படுவது தொடர்பில் அறிக்கைகள் கிடைக்கப்பெறுவதாகவும், அது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கான முழு பொறுப்பும் பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் அறிவித்ததன் பின்னர் அத பாரதூரமான விடயமாக இருக்கும் பட்சத்தில் பாதுகாப்பு அமைச்சு அது தொடர்பில் கவனம் செலுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி
சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்பு

Related Posts