சால்ட் அண்ட் பெப்பரில் அசத்தும் விக்ரம்

தற்போது எனை நோக்கி பாயும் தோட்டாவை இயக்கி வரும் கவுதம் வாசுதேவ் மேனன், அடுத்து இயக்க இருக்கும் படம் துருவ நட்சத்திரம்.

அஜித்துக்காக எழுதிய கதை. அதன் பிறகு அதில் சூர்யா நடிப்பதாக இருந்தது. தற்போது கடைசியாக விக்ரமிற்கு வந்திருக்கிறது.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் காற்றுவெளியிடை படத்தில் நடித்து வரும் அதிதிராவ், விக்ரம் ஜோடியாக நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் யார் என்பது முடிவு செய்யப்படவில்லை.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பார் என்றும், டான் மேக்கார்தர் ஒளிப்பதிவு செய்வார் என்றும், ஆண்டனி எடிட்டிங் செய்வார் என்றும் தெரிகிறது.

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கவுதம் மேனனின் ஆண்ட்ரகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்புகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடக்கிறது. இன்று முதல்கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

இந்த நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விக்ரம் முதன் முறையாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் காணப்படுகிறார்.

அஜித் தொடங்கி வைத்த சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு இப்போது விக்ரமும் வந்திருக்கிறார். துருவ நட்சத்திரத்தின் துணை தலைப்பாக யுத்த காண்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் பக்கா ஆக்ஷன் படம் என்பது தெளிவாகிறது.

படம் ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என்றும் சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சூர்யா நடிப்பதாக இருந்தபோது வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக்கில் 11 பெயர்களை குறிப்பிட்டு 12வது நபரை தேடிக் கொண்டிருக்கிறேன் என்ற வாசகம் இருந்தது.

இதில் அப்படி எதுவும் இல்லை. விக்ரம், கவுதம் மேனன் தவிர வேறு பெயர் எதுவும் இல்லை. எனவே இதுதான் பர்ஸ்ட் லுக் என்றும் கூறுவதற்கில்லை. வேறொரு நடிகர் படத்துடன் இன்னொரு லுக்கும் வரலாம்.

Related Posts