சாருஹாசன், ஜனகராஜ் இணையும் தாதா 87

80-களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனது தனித்துவமான, எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் சாருஹாசன். இவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணனுமாவார். அதேபோல், 80, 90-களில் காமெடியில் மட்டுமில்லாது, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் ஜனகராஜ். சாருஹாசன் தமிழ் சினிமாவில் தற்போதும் சில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால், ஜனகராஜோ சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார்.

இந்நிலையில், சாருஹாசனும், ஜனகராஜும் இணைந்து புதிய படமொன்றில் இணையவிருக்கிறார்கள். இப்படத்திற்கு ‘தாதா 87’ என்ற பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் சாருஹாசன் தாதாவாக நடிக்கிறாராம். ஜனகராஜ் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக வருகிறாராம். இவர்தான் படத்தின் கதாநாயகியின் தந்தையாவும் நடிக்கிறாராம்.

இப்படத்தை விஜய் ஸ்ரீ என்பவர் இயக்குகிறார். லியான்டர் லீ மார்ட்டி என்பவர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் போஸ்டரை நேற்று நடிகை கேத்ரீன் தெரசா வெளியிட்டுள்ளார். இப்படத்திற்காக கமல்ஹாசன் ஒரு பாடல் பாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கலை சினிமா நிறுவனம் மூலம் கலைசெல்வன் மருதை என்பவர் இப்படத்தை தயாரிக்கிறார்.

Related Posts