சாரதி, நடத்துநர்கள் சேவையின்போது கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. பஸ் பழுதடைந்தால் மட்டும் கதைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தவறின் சேவையில் இருந்து 10 நாள்கள் இடை நிறுத்தப்படுவர் என்று தனியார் பஸ் சங்கத்தின் சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதி மற்றும் நடத்துநர்கள் பஸ் கடமையில் ஈடுபட்டிருக்கும் போது முகச்சவரம் செய்திருத்தல் வேண்டும். இவற்றை மீறும் சாரதி, நடத்துநர்களுக்கு குற்றப்பணமாக 500 ரூபா அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தனியார் பஸ் சங்கத்தின் சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பஸ்களின் சாரதிகள், நடத்துநர்கள் பஸ் கடமையில் பின்பற்றுவது தொடர்பான சுற்றறிக்கை பஸ் உரிமையாளர்கள் ஊடாக சாரதிகள், நடத்துநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக பயனாளிகளுக்கு பயணச்சிட்டை வழங்கப்படுவது தொடர்பாக பயணச்சிட்டை ஆய்வாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டால் ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும். சாரதி மற்றும் நடத்துநர்கள் கடமையில் உள்ள போது புகையிலை, வெற்றிலை பயன்படுத்துவது முற்றாக நிறுதப்பட வேண்டும்.
இவற்றை மீறுவோர் குற்றப்பணமாக 500 ரூபா செலுத்த வேண்டும். சாரதி சேவையில் உள்ள போது பஸ்ஸில் ஏறினால் வேறு பஸ் சாரதிகளுடன் முரண்பட்டால் ஆசனத்தில் இருந்து இறங்கக்கூடாது. கடமை நேரத்தில் இவ்வாறு செய்தால் பத்து நாள்கள் சேவையில் இருந்து இடை நிறுத்தப்படுவர்.
நடத்துநர்கள் சேவையின் போது பஸ்ஸில் ஏறினால் சேவையின்போது வேறு பஸ் நடத்துநருடன் முரண்பாட்டில் ஈடுபட்டால் பத்து நாள்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்படுவர்.
மதுபோதையில் சாரதி சேவையில் ஈடுபட்டால் முன்னறிவித்தலின்றி உடன் ஒரு மாதத்துக்கு இடை நிறுத்தப்படுவர். சேவையின்போது சாரதி சேட்டுடன் வெள்ளைச்சாரம், அல்லது ஜீன்ஸும் நடத்துநர் சேட்டுடன், ஜுன்ஸும் அணித்திருந்தல் வேண்டும்.
இவற்றை மீறும் சாரதி, நடத்துநர்களுக்கு ஆயிரம் ரூபா அபராதம் தண்டப் பணமாக அறவிடப்படும் என வும் இந்த சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நடை முறை ஏற்கனவே சாரதி, நடத்துநர்களுக்கு தெரிவிக் கப்பட்டுள்ள தால் பொது மக்களுக்கு இடையூறு விளை விக்காத வகையில் செயற்பட வேண்டும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.