சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான வயது அல்லது கட்டணத்தில் அதிகரிப்பை ஏற்படுத்துவதற்கான எந்த தீர்மானமும் அரசிடம் இல்லையென்று மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான குறைந்த வயது 25 ஆகவும் அதற்கான கட்டணம் 25,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று சில சாரதி பயிற்சி நிலையங்களால் பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி கூறினார்.
அதன்படி சாரதிப் பயிற்சிக்காக வரும் மாணவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொடுப்பதற்காக அதிகளவான பணம் வசூலிக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென்று மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி கூறினார்.