சாரதிகளுக்கான தண்டனை, அபராதம் குறித்து புதிய சுற்றறிக்கை

வாகன சாரதிகள் இழைக்கும் குற்றங்கள் தொடர்பில் வழங்கப்படும் தண்டனைகள் மற்றும் அபராதம் குறித்து புதிய சுற்றறிக்கையை வௌியிட, எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பிலான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வாகன சாரதிகள் இழைக்கும் குற்றங்கள் தொடர்பில் வழங்கப்படும் தண்டனைகள் மற்றும் அபராதத் தொகையின் அளவு பற்றிய திருத்தம் குறித்து தமது கருத்துக்கள் இருப்பின் முன்வைக்குமாறும் தனியார் பஸ் சங்கங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த முன்மொழிவுகளை இவ் வாரத்துக்குள் எழுத்து மூலம் வழங்குமாறு அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அபராதத் தொகை தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் சந்திப்பு இடம்பெற்ற வேளையே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

Related Posts