சாமுவேல்ஸ் பந்து வீச ஓராண்டு தடை

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் சகல துறை ஆட்டக்காரரும், சுழற்பந்து வீச்சாளருமான சாமுவேல்ஸ், கடந்த மாதம் இலங்கைக்கு எதிரான டெஸ்டின் போது சந்தேகம் அளிக்கும் வகையில் பந்து வீசிய புகாரில் சிக்கினார்.

இது போன்ற சர்ச்சையில் 3-வது முறையாக சிக்கிய அவரது பந்து வீச்சு, அவுஸ்திரேலியாவில் உள்ள பரிசோதனை மையத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இதில் அவரது பந்து வீச்சு விதிமுறைக்கு புறம்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், அவர் ஓராண்டு பந்து வீச ஐ.சி.சி. நேற்று தடை விதித்தது.

Related Posts