சாமானியர்களின் பிரச்சினையை சொல்லும் சமுத்திரகனியின் தொண்டன்!

நாடோடிகள் படத்தில் காதலை கதையை படமாக்கியபோதும், ஒரு காதலை சேர்த்து வைப்பதற்காக நண்பர்கள் எத்தனை பிரச்சினைகளை, இழப்புகளை சந்தித்தார்கள் என்பதை சொல்லியிருந்தார் சமுத்திரகனி.

அதேபோல், அதன்பிறகு அவர் இயக்கிய போராளி, நிமிர்ந்து நில், அப்பா ஆகிய படங்களும் சமூக பிரச்சினைகளை சொல்லும் கதைகளில்தான் உருவாகியிருந்தது.

இந்த நிலையில், தற்போது அவர் தொண்டன் என்றொரு படத்தை இயக்கி வருகிறார். இதில் அவர் கதையின் நாயகனாக நடிக்க, இன்னொரு வேடத்தில் விக்ராந்த் நடிக்கிறார். சுனைனாவும் ஒரு வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் தலைப்பு தொண்டன் என்றதும் அரசியல் சம்பந்தப்பட்ட கதையில் தயாராவதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், அந்த படத்தில் அரசியல் துளியும் இல்லையாம். சாமானிய மக்களின் பிரச்சினைகளை கையிலெடுத்துள்ளாராம் சமுத்திரகனி. குறிப்பாக, நடுத்தர மக்கள் அரசியல் சட்டதிட்டங்களால் எந்த மாதிரியான பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை வெளிச்சம் போடும் இந்த படத்தில், ஆம்புலன்ஸ் டிரைவராக சமுத்திரகனி நடிப்பதாக கூறப்படுகிறது.

Related Posts