சா/த பரீட்சையில் ஆங்கில செயன்முறை பரீட்சை – கல்வியமைச்சர்

bandula_gunawardena300pxகல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப்பரீட்சையில் ஆங்கில செயன்முறை பரீட்சையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்த ஆங்கில செயன்முறை பரீட்சையானது ஆங்கில மொழிப்பரீடசையின் ஒரு பகுதியாக அமையும். ஆங்கில மொழிப்பரீட்சையில் எழுத்துப்பரீட்சைக்கு 90 புள்ளிகளும் ஆங்கில பேச்சு பரீட்சைக்கு 10 புள்ளிகளும் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சாதாரண தரத்திற்கு புதிய பாடங்களை அறிமுகப்படுத்தும் திட்டம் ஒன்று இருக்கின்றது. இதன் பிரகாரம் க.பொ.த சாதாரணத்தரப்பரீட்சையில் தொழிற்நுட்பம் எனும் பாடத்தொகுதியின் கீழ் தமக்கு விருப்பமான ஒரு தொழிற்நுட்ப பாடத்தை மாணவர்கள் தெரிவு செய்யமுடியும்.

இந்த தொழிற்நுட்ப பாடத்தொகுதியில் பொறியியல் விஞ்ஞானம் உள்ளிட்ட பாடங்களும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Posts