சாதி கட்டமைப்பு ஒழிக்கப்பட வேண்டும். -அங்கஜன்

DSC02124இப்பிரதேச மக்கள் என்னுடன் இணைந்தவர்கள் இவர்களை சாதிக்கட்டமைப்பால் ஒதுக்க எவராலும் முடியாது. சாதிக்கட்டமைப்பானது ஒழிக்கப்பட வேண்டும் அதிலும் அரசியலில் சாதி கட்டமைப்பு முறை வருவது தவறான ஒன்றாகும். இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், வட மாகாண சபைத் தேர்தல் வேட்பாளருமான அங்கஜன் ராமநாதன் அவர்கள் சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் நவிண்டில் சிவகாமியம்மன் ஆலய பொது மண்டபத்தில் இடம்பெற்ற பொது மக்களுடனான சந்திப்பில் தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்..

மேலும் வெளிநாடு போய் படித்து விட்டு வந்த எங்களுக்கு இந்த சாதிப்பிரிவினை எல்லாம் பார்க்க தெரியாது. நான் யாழ்ப்பாணம் வந்த பிறகும் என்னுடன் அதிகளவிலான மக்கள் பழகியுள்ளார்கள். அவர்களிடம் இவ்வாறு நான் சாதிப்பிரிவினை பார்த்து பழகியதில்லை.

என்னுடைய அலுவலகத்திற்கு நிறைய இளைஞர்கள் வந்து போகின்றார்கள் அவர்களிடம் நான் இப்பிரிவினை பார்த்ததில்லை. இன்றை இளைஞர்களும் அவ்வாறுதான் இருக்கின்றார்கள். ஆனால் அரசியலில் ஊறிப்போன இந்த சாதிக்கட்டமைப்பை துக்கி எறிய வேண்டும்
என் எண்ணப்படி நாங்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தை பழைய நிலைக்கு கட்டியெழுப்ப வேண்டும். இந்த சாதிப்பாகுபாட்டை ஒழித்து விட்டு ஒற்றுமையுடன் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும். தமிழ் மக்கள் என்பது சிறுபான்மையினம் என்ற கருத்தையே மாற்ற வேண்டும் என்று என்னுபவன் நான். இதற்குள் தமிழ் மக்களுக்குள் இன்னுமொரு சிறுபன்மையின தமிழ் மக்கள் உருவாக்க முனைவது மிகவும் தவறான ஓன்றாகும். உண்மையில் என்னை பொறுத்த மட்டில் இரு வகையினர் தான் ஓன்று ஆண் சாதி மற்றையது பெண் சாதி என்ற இரண்டும் மட்டுமே.

இதே போல் இலங்கையை பொறுத்த மட்டில் கூட சிங்களவர் தமிழர் என்று கூட பார்க்கமால் இலங்கையர் என்றுதான் பார்க்க வேண்டும். இன்று இந்தியாவை பார்க்கும் போது இந்தியாவில் பல இன மொழி மத அடிப்படையில் மக்கள் வாழ்கின்றானர். ஆனால் அவர்கள் இந்தியன் என்றே கூறுவார்கள் அது போலவே இலங்கையிலும் நிலைமை மாற வேண்டும்.

நாம் இன்றைய நிலையில் ஏனைய மாகாணங்களை போன்று எமக்கு தேவையான அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, எமக்கான முன்னேற்றங்கள் அனைத்தையும் முடிந்தவரையில் பெற்றுக் கொள்ள வேண்டும். எமக்கான உரிமைகள் பற்றி பாராளுமன்றத்தின் மூலமும், எமக்கான அபிவிருத்திகள் தொடர்பில் மாகாண சபையின் மூலமும் பெற்றுக் கொள்வதே பொருத்தமான செயற்பாடாகும்.
நாம் இப்போது நிற்கும் கட்டம் மிக முக்கியமான கட்டம். எதிர்காலத்தை நோக்கிய சரியான பாதையை தெரிவு செய்ய வேண்டிய கட்டத்தில் நிற்கின்றோம். எனவே இந்த மாகாண சபைத் தேர்தலில் மக்களாகிய நீங்கள் சிந்தித்து பொருத்தமான தலைவர்களை தெரிவு செய்யுங்கள். ஏன்று கூறினார்.

தெய்வங்கள் ஒன்று சேரும்போது நாங்கள் ஏன் ஓன்று சேர மறுக்கின்றோம்

DSC02131நாம் எல்லோரும் இலங்கை மக்கள் எங்களது கரங்கள் ஒன்றாக சேர வேண்டும். பௌத்த ஆலயங்களில் பிள்ளையார் உட்பட்ட இந்து கடவுள்கள் இருக்கின்றார்கள். தெய்வங்கள் ஒன்று சேரும்போது நாங்கள் ஏன் ஓன்று சேர மறுக்கின்றோம். என இந் நிகழ்வில் பங்குபற்றிய அமைச்சர் ரெயினோல்ட் குறே (சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு அமைச்சர்) குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

இன்று நான் 13 வது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் ஒருவன். ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவனாக இருந்தாலும் கூட 13வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளிக்கின்றேன். உண்மையில் வெளியில் நின்று உரிமைகளை கேட்பதை விட உள்ளுக்குள் நின்று அவர்களுடன் போரடி உரிமையை கேட்டு பெற்றால் தான் வெற்றி கிடைக்கும் வெளியில் நின்று சண்டை போடுவதால் எந்த பயனும் இல்லை.

நான் யாழ்ப்பாணத்திற்கு நிறைய தடவைகள் வந்துள்ளேன். கடந்த தடவை வந்தபோது இடம்பெற்றிருந்த அபிவிருத்தியை விட இந்த முறை பார்க்கும் போது முன்னேற்றம் காணப்படுகின்றது. இவற்றிற்கு காரணம் அரசாங்கமே. எனவே அரசாங்கத்துடன் இணைந்து அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும் அதற்கு அங்கஜன் இரமாநாதனை நீங்கள் ஆதரிக்க வேண்டும். என கூறினார்.

எந்த விதமான பலாத்காரமோ, துன்புறுத்தல்களோ இன்றி, வெடிச்சத்தங்களும், மரண ஓலங்களும் இன்றி, மனச்சாட்சிக்கு ஏற்ப வாக்களிக்கும் பாக்கியம் நமக்கு கிட்டியுள்ளது.

கடந்த 30 வருடங்களாக இப்படியானதொரு சூழல் நமக்கெல்லாம் பகல் கனவாகவே இருந்தது. வாக்குகளுக்கு பதிலாக தோட்டாக்களும், தேர்தல்களுக்கு பதிலாக போர்க்களங்களுமே இருந்தன.

வெடிச்சத்தம் கேட்ட சமூகத்திற்கு, மரண ஓலங்கள் கேட்ட சமூகத்திற்கு, கண்ணீர்கள் சிந்திய சமூகத்திற்கு மறுபடியும் வாழ்ககையில் நம்பிக்கையை ஏற்படுத்த எமது அரசால் முடிந்தது. பாலைவனத்திலும் பயிர் செய்ய எம்மால் முடிந்தது.

கடந்த 30 வருட யுத்தத்தில் வெற்றி பெற்றது பிரபாகரனும் இல்லை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இல்லை. வெற்றி பெற்றது சிங்களவர்களும் இல்லை, தமிழர்களும் இல்லை, போரின் வெற்றி வடக்குக்கும் இல்லை தெற்குக்கும் இல்லை.

இந்த யுத்தம் எமக்கெல்லாம் பெற்றுத்தந்தது மரணங்களையும், வேதனைகளையும், அனாதைகளையும், கண்ணீர்களையும் மட்டுமே.
மக்கள் இல்லாத பாழடைந்த கிராமங்களையும், இடிபாடுகளுடன் கூடிய வீடுகள், சின்னாபின்னமாகிய குடும்பங்கள் மட்டுமே எமக்கு மிஞ்சின.

இப்போது யுத்தம் முடிந்து விட்டது. கடந்த கால வலிகளை மறந்து விடுவோம். புதிய இலங்கையை கட்டியெழுப்புவோம். யுத்தத்தால் இழந்த உயிர்களை தவிர ஏனைய அனைத்தையும் பெற்றெடுப்போம். யுத்தத்திற்கு முன்பு இருந்ததை விட சிறந்ததொரு அபிவிருத்தியை ஏற்படுத்துவோம்.

யுத்த நிறைவுக்கு பின்னரான இந்த நான்கு வருடங்களில் வீடுகள், பாடசாலைகள், வீதிகள், உட்கட்டுமானங்கள், புத்துயிர் பெற்றிருக்கின்றன. கைத்தொழில் பேட்டைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன, தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளன, மின்சார வசதி கிராமங்கள் தோறும் வந்து விட்டது. இவற்றை யாரும் மறுக்க முடியாது.

கடந்த 30 வருட யுத்தத்தினால் இளைஞர்கள், யுவதிகள், குழந்தைகள் என பெறுமதிவாய்ந்த உயிர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். கணவனை இழந்த மனைவிமார், பிள்ளைகளை இழந்த பெற்றோர், உடன் பிறப்புகளை இழந்த சகோதர சகோதரிகள், என தினம் தினம் நிறைய சம்பவங்கள் நடந்து கொண்டே இருந்தன. ஆனால் இன்று அவை அனைத்தும் நின்று விட்டன.

இப்போது ஏனைய நாடுகளுக்கேற்ப எமது நாட்டையும் மிக வேகமாக கட்டியெழுப்ப வேண்டும். இளைஞர்களின் கனவை நனவாக்க வேண்டும். கல்வி மேம்பாடு, தொழில் வாய்ப்பு, என அனைத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும். இவற்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினாலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணணி அரசாங்கத்தினாலுமே சாதிக்க முடியும். அதனால் நீங்கள் அவரோடு இணைந்து அவருடைய கைகளை பலப்படுத்துங்கள்.

எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரான உங்கள் பிள்ளை அங்கஜன் இராமநாதன் ஒரு இளைஞர். அவருக்கு ஜனாதிபதி அவர்களுடன் நெருக்கமான உறவு உள்ளது. இதனால் உங்களுக்கானவற்றை அவரால் இலகுவாக பெற்றுத் தரமுடியும். எனவே உங்கள் நலன்களை பேண நீங்கள் அவருக்கு வாக்களியுங்கள்.

அரசாங்கம் இந்த யாழ் மாவட்ட மக்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளை செய்துள்ளது, செய்கின்றது, செய்யவும் உள்ளது. இவை அனைத்துக்கும் காரணகர்த்தா உங்கள் அங்கஜன் இராமநாதன் அவர்களே. ஆகவே நன்றியுணர்வுடன் அங்கஜன் அவர்களுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்வதன் ஊடாக உங்களுடைய தேவைகளை மேலும் பூர்த்தி செய்ய முன்வாருங்கள். என்று கூறினார்.

 

DSC02101

DSC02105

DSC02112

DSC02115

Related Posts