கல்விப் பொதுத்தராதர சாதார தரப் பரீட்சை வினாத்தாள்களை மீள மதிப்பீடுவதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்பின்னர் மீள் மதிப்பிடுவதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என திணைக்களம் கூறியுள்ளது.
பாடசாலை பரீட்சாத்திகள் மீள் மதீப்பீட்டு விண்ணப்பத்தை அதிபரிடம் கையளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
தனியார் விண்ணப்பதாரிகள் பரீட்சைகள் திணைக்களத்தில் தமது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2015 கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 5 இலட்சத்து 36 ஆயிரத்து 152 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.