சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் விஷேட ஒருநாள் சேவை

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அடையாள அட்டையை விரைவாக பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் 25ம் திகதி விஷேட ஒருநாள் சேவை திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது.

அன்றைய தினம் பாடசாலை விண்ணப்பதாரிகள் வருவது கட்டாயம் அல்ல என்றும், அந்த மாணவர்களின் உறவு முறையை நிரூபிக்க முடியுமான உறவினர் ஒருவர் கிராம சேவகரிடம் உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்துடன் வருகை தர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திணைக்களத்திற்கு விண்ணப்பித்துள்ள பாடசாலை விண்ணப்பங்களுக்கான அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை தபால் செய்யும் பணிகள் தற்பொது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது.

Related Posts