கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
அத்துடன், ஓகஸ்ட் மாதம் நடைபெறும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்கு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2019 டிசெம்பரில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மார்ச் 28ஆம் திகதி வெளியிடுவது என்று முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் நாட்டில் கோரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.