சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஆள்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

வரும் டிசெம்பர் மாதம் இடம்பெறும் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது என்று ஆள்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்தார்.

விண்ணப்பித்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டை கிடைக்கப் பெறாவிட்டால் அல்லது ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால் விரைவாக ஆள்பதிவுத் திணைக்களத்திற்கு வந்து திருத்திக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வருடம் புதிதாக அடையாள அட்டை பெறுவதற்கு மூன்று இலட்சத்து 95 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான வயதெல்லை 15 ஆககுறைக்கப்பட்டுள்ளது. அதனால் விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts