கடந்த வருடம் நடந்த ஜீ.சி.ஈ. சாதரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாத இறுதியில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது குறித்துப் பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:
கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் நாடளாவிய ரீதியில் நடந்த ஜீ.சி.ஈ சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 6 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றினர்.
இப்பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் அனைத்தும் நாளை வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. எனவே கடந்த வருடங்களைப் போன்று இம்முறையும் இம்மாத இறுதிக்குள் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும்