சாதனை வீரன் புசாந்தனை நேரில் சந்திதார் அங்கஜன்!

சாதனை வீரன் புசாந்தனை நேரில் சென்று வாழ்த்தியுள்ளார் அங்கஜன் இராமநாதன்.அண்மையில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பழுதூக்கல் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று தமிழ் இனத்திற்கு பெருமை சேர்த்த எங்கள் யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் அவர்களின் இல்லத்துக்கு சென்ற அங்கஜன் இராமநாதன் நேரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற இவரது கனவை நனவாக்கியமை லைக்கா ஞானம் அறக்கட்டளை என்பது விசேட அம்சமாகும்.

அதன்படி பொதுநலவாய போட்டியில், பழுதூக்கும் விளையாட்டில் கலந்து கொண்டிருந்த குணம் புஷாந்தனுக்கு மூன்று பிரிவுகளில் பதக்கங்கள் வென்றிருந்தார்.

மேலும் லைக்கா ஞானம் அறக்கட்டனையின் நல்லெண்ண நடவடிக்கையினால் புஷாந்தனின் கனவு நனவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts