சாதனைகளே இனத்திற்கு பெருமை: நீதிபதி இளஞ்செழியன்

பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்கள் சிறந்த சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் அந்த சாதனைகளே இனத்திற்கும் மொழிக்கும் பெருமை தேடித் தரும் என்றும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய நீதிபதி இளஞ்செழியன், ”கல்வியை மட்டுமே நாங்கள் இழக்கவில்லை. அது எங்களுடன் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கின்றது. அதனை கைவிடக் கூடாது” என மேலும் தெரிவித்தார்.

Related Posts