சாகிறத்துக்கு முதல் காணியை விடுங்கோ வயாவிளான் மூதாட்டியின் ஆதங்கம்

நீங்கள் பொன் தர வேண்டாம். எங்கள் சொந்த மண்ணை விட்டால் போதும். நான் செத்தா எனக்குப் பிறகு என்ர பிள்ளைகளுக்கு எது தங்கட காணியயன்றே தெரியாது. என்னைச் சாகிறதுக்கு இடையில பிள்ளைகளுக்குக் காணி யைக் காட்டவாவது விட வேணும்’ என்று 75 வயதான அம்மா ஒருவர் தெரிவித்தார்.

வயாவிளான் கிராம சேவையாளர் பிரிவு மக்கள் மீள்குடியமர்வுக்கு அழைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டனர். இதனால் பொதுமக்கள் பலரும் ஏமாற்றமும் கவலையும் அடைந்தனர். ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள் ஊடகங்க ளுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டனர்.

நாங்கள் எங்களது காணிகளைப் பார்வையிடலாம் என்ற நம்பிக்கையிலேயே வந்தோம். மன்னாரிலிருந்து இதற்காக எங்களது நாளாந்த அலுவல்களை எல்லாம் விட்டு இங்கு வந்தோம். இறுதியில் பிரதான வீதியைத் தவிர வேறு எதனையும் பார்க்க விட வில்லை. இவ்வாறு செய்வதற்காகவா எங்களை இங்கு வரச்சொன்னார்கள் என்று கேள்வி எழுப்பினர்.

25 வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணுக்குப் போகின்றோம் என்ற ஆவலில், இந்த மண்ணையே பார்க்காத பிள்ளைகளையும் அழைத்து வந்தோம். இறுதியில் எங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட் டார்கள்.

இராணுவத்தினர் வேலிகள் அமைப்பதைப் பார்ப்பதற்காகவா எங்களை இங்கு அழைத்து வந்தார்கள். இவர்கள் இவ்வாறு செய்வதைப் பார்த்தால் எந்தவொரு காலத்திலும் எங்களது சொந்த மண்ணுக்குச் செல்ல முடியாது என்ற நிலைமைதான் வரும்போல் இருக்கின்றது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Related Posts