சவூதி அரேபியாவில் இருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனை

சவூதி அரேபியாவில் பராயமடையாதவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பான இரு வேறு வழக்குகளில் இருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

vaal-marana-thandanai

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த மரண தண்டனை நிறைவேற்றங்கள் குறித்து சர்வதேச ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

7 வயது சிறுவனை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின் கிணற்றில் வீசி படுகொலை செய்தமை தொடர்பில் ஹமாட் பின் மெஷிஹென் அல் -ரஷிடி என்பவருக்கு ரியாத்தின் வடக்கிலுள்ள காஸிம் மாகாணத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அதே சமயம் பராயமடையாத ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை மற்றும் பிறிதொருவரை கடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இஸ்ஸா பின் மொஹமட் அல்- ரஷிடிக்கு வட ஹெயில் மாகாணத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இது இந்த வருடத்தில் சவூதி அரேபியாவில் தலையை வெட்டி நிறைவேற்றப்பட்ட 15 ஆவது மரண தண்டனையாகும்.

கடந்த ஆண்டில் இந்நாட்டில் 78 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Related Posts