சலுகை அரசியலுக்கு முடிவு கட்டவேண்டும்: சீ.வீ.கே.சிவஞானம்

c-v-k-sivaganamஎங்களுடைய போராட்டங்கள் எவ்வாறாக இருந்தாலும் அரசாங்கம் சலுகை அடிபடியிலேயே தமிழ் மக்களை கவனித்து வந்திருகின்றது. சலுகை வளங்குகின்றவர்கள் அதை எந்த காலத்திலும் எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்திவிடலாம்.

சலுகை அரசியலில் அவர்கள் நினைத்தபடி தானம் வழங்கும் நிலையே காணப்படுகின்றது. அதனால் நாங்கள் இந்த வடமாகாணசபையை கைபற்றி சலுகை அரசியலுக்கு முடிவு கட்டவேண்டும்’ என்று தமிழரசு கட்சியின் துணைப் பொது செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளருமாகிய சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

’13ஆவது அரசியல் திருத்த சட்டத்தையோ அல்லது மாகாண சபை முறைமையையோ எங்களுடைய இனப்பிரச்சனைக்கான தீர்வாக நாங்கள் ஒருபோதும் ஏற்றுகொள்ளவில்லை’ எனவும் அவர் தெரிவித்தார்.

ஆவரங்கால் பகுதில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

‘வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவது தொடர்பாக சில கேள்விகள் எழுப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் முக்கியமான இரண்டு விடயங்களை நாங்கள் தெளிவுபடுத்தவேண்டும்.

மாகாணசபை என்பது நாட்டினுடைய மூன்று தட்டு கட்டமைப்பில் ஒரு அமைப்பாக இருக்கிறது.

இது தமிழ் மக்களுக்கான ஒரு கட்டமைப்பு அல்ல முழு நாட்டுக்குமான கட்டமைப்பு.

தேர்தல்களை பொறுத்தவரையில் நாங்கள் நாடாளுமன்ற தேர்தல்களில் பங்குபற்றி இருக்கின்றோம். மாகாணசபைதான் எங்களுடைய முழு தாயகத்துகமான கட்டமைப்பாக இருக்கிறது.

இதுவரை எங்களுடைய அரசியல் வாழ்கையில் நாங்கள் எப்பொழுதும் வெறும் சலுகையை நம்பியவர்களாகவே வாழ்ந்து இருக்கின்றோம். எங்களுடைய அரசியல் அவ்வாறே அமைந்து இருக்கிறது.

எங்களுடைய போராட்டங்கள் எவ்வாறாக இருந்தாலும் அரசாங்கம் சலுகை அடிபடியிலேயே தமிழ் மக்களை கவனித்து வந்திருகின்றது. சலுகை என்பது அதை வளங்குகின்றவர்கள் அதை எந்த காலத்திலும் எப்பொழுது நினைத்தாலும் நிறுத்திவிடலாம்.

சலுகை அரசியலில் அவர்கள் நினைத்தபடி தானம் வழங்குவது போல் ஒரு நிலையே காணப்படுகின்றது. அனால் நாங்கள் இப்பொழுது இந்த வடமாகாணசபையை கைபற்றி சலுகை அரசியலுக்கு முடிவு கட்டவேண்டும்’ என்றார்

Related Posts