சலசலப்பை ஏற்படுத்திய வாத்யாரும் தலயும் பட போஸ்டர்!

புதுமுக டைரக்டர் சூர்யா இயக்கி வரும் படம் அன்னாத்த குப்பத்துல வாத்யாரும் தலயும். இந்த படத்தில் எம்ஜிஆர், அஜித் சம்பந்தப்பட்ட சில விசயங்களும் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

mgr-ajith

அதனால் அவர்களது புகைப்படங்களை முன்னிறுத்தி அப்படத்தின் போஸ்டர் ஒன்று சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது. அதில், தர்மத்தில் சிறந்தவர் எம்ஜிஆரா-அஜித்தா என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. ஆனால் அது எம்ஜிஆர், அஜித் ரசிகர்களுக்கிடையே பெரும் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது.

அதையடுத்து, தர்மத்தில் சிறந்தவர் எம்ஜிஆர்தான். அவர் மண்ணுலகில் வாழ்ந்த தெய்வம் என்று எம்ஜிஆர் ரசிகர்கள் அடித்து சொல்லி வரும் அதேநேரத்தில், தர்மத்தில் சிறந்தவர் அஜித்தான் என்று அவரது ரசிகர்களும் இணைய தளங்களில் சர்ச்சையை உருவாக்கி வருகின்றனர். அந்த படத்தில் எந்தமாதிரியான கருத்து சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளாமல் அவர்களாக ஒரு கருத்தை யூகித்து வார்த்தை மோதலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஆனால் வாத்யாரும் தலயும் படத்தில் அப்படி என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது என்று டைரக்டர் சூர்யாவிடம் கேட்டபோது? இந்த படம் எம்ஜிஆர், அஜித் பற்றிய கதையில்தான் உருவாகியுள்ளது. அவர்கள் செய்த தர்மங்கள் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், படத்தின் கதையை இப்போதே சொல்லிவிட்டால் அதிலுள்ள சுவராஸ்யம் போய் விடும். அதனால் வாத்யாரும் தலயும் படம் வெள்ளித்திரைக்கு வரும் இந்த கேள்விக்கு பதில் கிடைக்கும் என்கிறார்.

Related Posts