சற்றுமுன் மீண்டும் குண்டு வெடிப்பு; பொலிஸ் அதிரடிப்படை குவிப்பு!

கம்பஹா பூகொட நீதிமன்றுக்கு அருகில் சற்றுமுன் சிறிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.

குறித்த நீதிமன்றுக்கு அருகிலுள்ள வெற்றுக்காணியின் குப்பை மேட்டில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்லதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த வெடிப்புச் சம்பவத்தினால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் குறித்த இடத்திற்கு அதிரடிப்படையினர் சென்றுள்ளதுடன் பொலிஸார் அதுகுறித்த விசாரணைகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts