சர்வேஸ்வரன் கல்வியமைச்சர்! அனந்தி புனர்வாழ்வு மீள்குடியேற்றம் கூட்டுறவு அமைச்சர்!

அமைச்சரவை இழுபறி முடிவுக்குவந்துள்ளது. சர்வேஸ்வரன் கல்வி விளையாட்டு பண்பாட்டு அலுவல்கள்  அமைச்சர்ராகவும்  அனந்தி சசிதரன்  புனர்வாழ்வு மீள்குடியேற்றம் சமூகசேவைகள் மகளீர் விவகாரம்  மற்றும் கூட்டுறவு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு ஆளுனருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பில் முதலமைச்சர் ஆளுனருக்கு இன்று சிபாரிசுகளை வழங்கியுள்ளார். நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்பு நடைபெறும். முதலமைச்சர் விவசாய கால்நடை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சினை தனது வசம் வைத்துள்ளார். இதன்மூலம் வெற்றிடமாயிருந்த அமைச்சர் பொறுப்புகள் விடயம் முடிவுக்கு வருகின்றது.

இதேவேளை இன்றுமாலை முதலமைச்சர் ஆதரவு அணி மாகாணசபை உறுப்பினர்களை முதலமைச்சர் சந்திக்க உள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஏற்கனவே விசாரணை அறிக்கை மீதான சர்ச்சைகளை அடுத்து இராஜினாமா செய்திருந்த குருகுலராஜா மற்றும் ஐங்கரநேசன் ஆகியோரின் அமைச்சுக்களை முதல்வர் தன்வசம் எடுத்திருந்தார் .நேற்று முன்தினம் தமிழரசுக்கட்சி கல்வியமைச்சராக ஆர்னோல்ட் அவர்களை நியமிக்குமாறு முதல்வருக்கு பிரேரித்திருந்தது எனினும் அதனை முதல்வர் ஏற்க மறுத்திருந்தார்.

முதலமைச்சரினை பதவி கவிழ்க்க எடுக்கப்பட்ட முயற்சியினை முறியடிக்க தன்னுடன் நின்ற உறுப்பினர்களில் இருந்து அமைச்சர்களை தெரிவு செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம்  ஆளும் கட்சியில் முதல்வர் அணி  தனியாக செயற்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts