சர்வாலய தீபத்திற்கும் யாழில் தடை; இராணுவம் கெடுபிடி

யாழ். குடாவில் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினமும் சர்வாலய தீபத்தினை ஏற்றவிடாது இராணுத்தினரும் புலனாய்வாளர்களும் மிரட்டியதுடன் மக்களால் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபங்களை எடுத்து வீசியதாகவும் தெரியவருகின்றது.

நேற்றைய தினம் சர்வாலய தீபம் இந்துக்கள் தமது வீடுகளில் தீபம் ஏற்றுவது எமது பாரம்பரிய கலாச்சார முறைமைகளில் ஒன்று .அதனை மக்கள் மகிழ்வுடன் கொண்டாடினர்.

ஆனாலும் யாழில்.பல்வேறு பகுதிகளில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபங்களை இராணுவத்தினர் உடைத்தும் , பிடுங்கி எறிந்தும், கால்களால் தட்டி விட்டும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்துடன் தீபம் ஏற்றிய வீடுகள் மற்றும் கடைகளில் உரிமையாளர்களை மிரட்டியதாகவும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலேயே இராணுத்தினர் மற்றும் புலனாய்வாளர்களது அடாவடி அதிகரித்திருந்ததாக தெரியவருகின்றது.

Related Posts