சர்வமதக் குழுவினர் தமது பயணத்தின் ஒரு அங்கமாக சனிக்கிழமை (24) மாலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
மதங்களுக்கிடையிலான இன ஒற்றுமை, மக்களுக்கிடையிலான சகோரத்துவம், நட்புறவு, சுகவாழ்வு மற்றும் சமூக, சமய, கலாசார, பொருளாதார ரீதியான மக்களது நிலமைகளை, கருத்துக்களை அறியும் வகையில் இக்குழுவினர்கள் யாழப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
மேற்படி குழுவினர், நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கும் விஐயம் செய்து ஆலயபூஜை வழிபாடுகளிலும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து இவர்கள் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரமாச்சாரியரை சந்தித்து கலந்துரையாடினர்.
தற்காலத்தில் காணப்படும் சமய விழுயங்களின் மேம்பாடுகள், கலைகலாசாரத்தின் முக்கியத்துவங்கள், யாழ்.மாவட்ட மக்களின் சழுக, சமய, பொருளாதார ரீதியாக எற்படும் இன ஒற்றுமை தொடர்பாகவும் இவர்கள் கேட்டறிந்துகொண்டனர்.
மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ள இக்குழுவினர் யாழ்.மக்களுடைய சுகவாழ்வு, நட்புறவு, நல்லிணக்கம் தொடர்பாக அறிந்துகொள்ளவுள்ளனர்.