இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி நடை பயணம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.
மனித உரிமை மீறல்களுக்கு உள்ளக பொறிமுறை பொருத்தமற்றது என்பதை சட்டிக்காட்டியும் சர்வதேச விசாரணையைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியும் வட மாகாண சபை உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் குறித்த நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று ஆரம்பமாகியுள்ள நடை பயணமானது எதிர்வரும் திங்கட்கிழமை நல்லூர் கந்தசாமி ஆலயத்தை சென்றடையும் என ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நடை பயணத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.