சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற ஜான்சனுக்கு சச்சின் வாழ்த்து

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிச்சேல் ஜான்சன். 34 வயதான இவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக நேற்று அறிவித்தார்.

tendulkar_jonson

நியூசிலாந்துக்கு எதிராக பெர்த் மைதானத்தில் முடிந்த டெஸ்டோடு ஜான்சன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

மிச்சேல் ஜான்சன் 73 டெஸ்டில் விளையாடி 311 விக்கெட் கைப்பற்றியுள்ளார். சராசரி 28.52 ஆகும். 61 ரன் கொடுத்து 8 விக்கெட் கைப்பற்றியது அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும். 12 முறை 5 விக்கெட்டுக்கு அதிகமாகவும், 3 தடவை 10 விக்கெட்டுக்கு அதிகமாகவும் கைப்பற்றி உள்ளார்.

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ஜான்சனுக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் “வாழ்த்துக்கள். ஜான்சன் ஒரு சிறப்புவாய்ந்த பந்து வீச்சாளர். மும்பைக்காக விளையாடிய போது அவரை பற்றி நிறைய தெரிந்துக்கொண்டேன். ஜான்சனின் ஆக்ரோஷமான அணுகுமுறை எனக்கு விருப்பமான ஒன்று” என தெரிவித்துள்ளார்.

சச்சின் மட்டும் அல்லாமல் பல முன்னனி கிரிக்கெட் வீரர்கள் மிச்சேல் ஜான்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Posts