சர்வதேச போட்டிகளில் இருந்து சேவாக் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கட் விரர் விரேந்திர சேவாக் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

sewak

1999ல் மொகாலியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார் விரேந்திர சேவாக்.

251 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சேவாக் 15 சதம், 38 அரை சதங்களுடன் 8273 ஓட்டங்களை குவித்துள்ளார்.

104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 23 சதம், 32 அரைசதங்களுடன் 8,556 ஓட்டங்களை குவித்துள்ளார்.

19 சர்வதேச டி-20 போட்டிகளில் 394 ரன்கள் எடுத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த வீரர்களில் வீரேந்திர ஷேவாக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை 300 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையும் இவருக்குண்டு.

Related Posts