சர்வதேச பெண்கள் தினத்தில் கொடுமை ; இளம் பெண் கற்பழித்து தீ வைப்பு

15 வயது இளம்பெண்ணை ஒருவர் கற்பழித்து அவரை தீ வைத்து எரித்து கொல்ல முயற்சி நடந்தது. உயிருக்கு போராடிய நிலையில் அவர் டில்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் இந்நாளில் இந்த சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நொய்டாவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் இருந்த பெண்ணை ஒருவர் பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து அவர் மீது தீயை கொளுத்தி போட்டு தப்பி ஓடி விட்டார். அலறல் சப்தம் கேட்டு அவரது பெற்றோர்கள்  அவரை  டில்லி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில் இந்த பெண் 10-ம் வகுப்பு படிக்கும் போது ஒரு இளைஞர் பின்தொடர்ந்துள்ளான். இதனால் இந்த மாணவி படிப்பை நிறுத்தி வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த இளைஞர் வீட்டுக்குள் நுழைந்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது . அந்த நபரை கைது செய்துள்ளோம் என தெரிவித்தனர்.

இந்த இளைஞர் ஒரு தலைக்காதல் செய்ததாகவும், தொந்தரவு காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். விடுதலையான பின்னர் அந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என கூறப்படுகிறது.சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடும் வேளையில் இந்த சம்பவம் டில்லி மற்றும் புறநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts