சர்வதேச நீதிபதிகளற்ற விசாரணை தமிழர்களுக்கு நீதியை தராது- விக்கினேஸ்வரன்

இலங்கைமீதான போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள் வாங்கப்படாவிட்டால் தமிழ் மக்களுக்கு நீதி என்பது கிடைக்கப் போவதில்லை என பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொது நலவாய விவகாரங்களுக்கான அமைச்சர் பரோனஸ்அனெலியிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

14962559_1795793037362607_2201449275421079449_n

நேற்று முன்தினம் இரவு இலங்கையை வந்தடைந்த பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான அமைச்சரும், பாலியல் வன்முறைகளுக்கு எதிரான விசேட பிரதிநிதியுமான பரோனஸ் அனெலி தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் வடக்கு மாகாண முதலமைச்சரினையும் அவர் தலைமையிலான அமைச்சர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ஜெனிவாவில் அடுத்த வருட மார்ச் மாதம் வரவேண்டிய செயலாளர் நாயகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் நடைபெறுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக பிரிந்தானிய அமைச்சர் வந்துள்ளார். நாம் ஜெனிவா தீர்மானம் தொட ர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் போதே பல கடிதங்களை எழுதியிருந்தோம்;. அந்த கடிதங்களில் கூறிய விடயங்கள் தற்போது நடை முறையில் நடைபெறுவதனை இப்போது எடுத்து காட்டியிருந்தேன்.

அதாவது, வெளிநாட்டு ஈடுபாட்டுடன் இந்த போர் விசாரணை நடைபெறாவிட்டால் நீதியை பெற்றுக்கொள்ள முடியாமல் செல்லும் என கூறியிருந்தேன். நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களில் வெளிநாட்டு உள்ளீடுகளை அரசு கொண்டுவருவதாக தெரியவில்லை. வெளிநாட்டு உள்ளீடுகள் வராவிட்டால் எங்களுக்கு நீதி கிடைக்காது என்பது நிச்சயம்.

இதனைவிட போர்க்குற்ற சட்டமானது எமது சட்டத்திற்குள் கொண்டுவரப்படல் வேண்டும். அதாவது பலநாடுகளில் இருக்கும் சட்டமாக இருந்தாலும், எமது நாட்டில் போர்க்குற்றம் இழைக்கப்படும் போது சட்டமாக இருக்க வில்லை. எனவே எங்களுடைய நாட்டு சட்டத்திற்குள் போர்க்குற்ற சட்டம் உள்வாங்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

இது சம்பந்தமாக அரசு தரப்பு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதனை அவருக்கு வலியுறுத்தி இருந்தேன். அதன் பின்னர் பெண்கள் சம்பந்தமான விடயங்களையும் குறிப்பிட்டிருந்தேன். விதவைகள் எத் தனை பேர் , அவர்களுடைய பாதுகாப்பு, அவர்கள் தொடர்பான செயற்திட்டங்கள் மேற்கொள்ள கூடிய அவசியங்களை எடுத்து கூறினேன்.

செயற்திட்டங்கள் எவ்வாறான வகையில் அமைய வேண்டும் என எம்மிடம் கோரி அந்த செயற்திட்டங்களை எம்மிடம் தந்தால் அதற்கான நிதியுதவிகளை வழங்குவதாவும் கூறினார். யுத்தம் முடிந்து எட்டு வருடங்களாகும் நிலையில் தொடர்ந்தும் ஒரு இலட்சத்து க்கு அதிகமான இராணுவம் இருப்பது எந்த ளவிற்கு எமக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதனை நாங்கள் குறிப்பிட்டிருந்தோம்.

எனினும் சமாதானம் நோக்கி செல்லும் போது ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அத ற்கு நான், நாங்கள் விட்டுக்கொடுப்பதற்கு நாங்கள் முன்வந்தால் கூட பலவிதங்களில் எங் களை அடிமைப்படுத்தும் விதத்தில் தான் சில சில நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டு இரு க்கின்றனர். தெற்கில் எடுக்கப்படும் முடிவுகள், எங்கள் தனித்துவத்தையும் உரிமைகளையும் புறக்கணிப்பதாக இருப்பதனையும் நான் எடுத்து கூறினேன் என முதலமைச்சர் குறிப்பிட்டார்

Related Posts