சர்வதேச தரத்தில் யாழ்ப்பாணத்தில் உதைபந்தாட்ட பயிற்சி மைதானம்

சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஜேர்மன் அரசின் உதவியுடன் சர்வதேச தரத்திலான உதைபந்தாட்ட பயிற்சி மைதானம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை யாழ். அரியாலைப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தை சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜோசப் ஷெப் பிளாட்டர் பிற்பகல் 1.50 மணியளவில் திறந்து வைத்தார்.

viky-foot-ball

இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், வடக்குமாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண கல்வி அமைச்சர், வடக்குமாகாண சபை அவைத் தலைவர், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Related Posts