சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம்

டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற ரீதியில் வென்றது. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளுக்கான சர்வதேச தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி 27 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 900 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இதுபோல டெஸ்ட் போட்டிகளுக்கான சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் 451 புள்ளிகளுடன் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts