சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் காலி முகத்திடலில்

சர்வதேச கரையோரப் பாதுகாப்பு தினம் இன்று நினைவுகூரப்படுவதை முன்னிட்டு, இலங்கையிலும் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலி முகத்திடலில் ஆரம்பமாகியுள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 55,000 இற்கும் அதிகமான தொண்டர் படையணி இந்த வேலைத்திட்டத்தில் இணைந்துகொண்டுள்ளது.

கரையோரம் சார்ந்த அனைத்து நகரங்களையும் கேந்திரமாகக் கொண்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்தது.

maith-my3-gold-face-1

maith-my3-gold-face-2

maith-my3-gold-face-3

Related Posts