சர்வதேச ஒருநாள் போட்டிகளில் டோனி புதிய சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 200 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் 2 சிக்ஸர்கள் அடங்களாக 78 ஓட்டங்கள் குவித்தமை குறிப்பிடத்தக்கது.

டோனி தனது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 322 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

நேற்றய 4வது ஒருநாள்போட்டியில் இந்திய அணி 11 ஒட்டங்களால் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், யுவராஜ் சிங் மற்றும் அஸ்வின் நீக்கப்பட்டு மொகமது ஷமி, தினேஷ் கார்த்திக் மற்றும் ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

பேட்டிங் தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர்களான எவின் லீவிஸ் மற்றும் கைல் ஹோம் தலா 35 ரன்களை குவித்தனர். நிதான துவக்கத்தை அளித்த ஜோடியை பாண்டியா பெவிலியனுக்கு அனுப்பினார். துவக்க ஜோடியை தொடர்ந்து களமிறஹ்கிய ஷை ஹோம் 25 ரனக்ளுடனும், ராஸ்டன் சேஸ் 24 ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் துவக்க ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மற்ற வீரர்களும் குறைந்த ரன்களில் ஆட்டமிழக்க 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்றது.

இந்திய அணி சார்பில் ஹார்திக் பாண்டியா மற்றும் உமேஷ் யாதவ் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர். குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். 190 என்ற வெற்றி சுலப இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

துவக்க வீரராக களமிறங்கிய ஷிகர் திவான் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் வீராட் கோலி 3 ரன்களிலும், தினேஷ் கர்திக் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒருபக்கம் விக்கெட்கள் சரிந்த நிலையிலும் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அஜிங்கியா ரகானே பொறுப்புடன் விளையாடினார். 91 பந்துகளில் 60 ரன்களை குவித்த ரகானே பிஷோ பந்தில் ஆட்டமிழந்தார்.

பின் களமிறங்கிய தோனி நிதானமாக விளையாடி 54 ரன்களை குவித்தார். எனினும் மற்ற வீரர்கள் ரன்களை குவிக்க தவறியதால் இந்திய அணி 49.4 ஓவர்களில் 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 11 ரன்களில் வெற்றியடைந்தது.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் தொடரின் இறுதி போட்டி ஜூலை 6-ந்தேதி நடைபெறுகிறது.

Related Posts