மூன்று வருடங்களாக இப்போது வரும் அப்போது வரும் என்று போக்குக் காட்டிய எஸ்.ஜே.சூர்யாவின் இசை வரும் 30 -ஆம் தேதி திரைக்கு வருகிறது.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்புடன் இசைக்கு சூர்யா இசையமைக்கவும் செய்துள்ளார்.
வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளருக்கும், வளர்ந்துவிட்ட முதிய இசையமைப்பாளருக்கும் இடையில் ஏற்படும் ஈகோ மோதல்தான் படத்தின் கதை. ரஹ்மான் – இளையராஜாவை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் என்பதால் இசை மீது ஒருவித எதிர்பார்ப்பு உள்ளது.
முதிய இசையமைப்பாளராக சத்யராஜ் நடித்துள்ளார். இந்த வேடத்தில் முதலில் ஒப்பந்தமானவர் பிரகாஷ்ராஜ். பிறகு திடீரென இசையிலிருந்து விலகினார். இளையராஜாவை இமிடேட் செய்யும் வேடம் என்பதால் அவர் விலகியதாக கூறப்பட்டது.
ஜனவரி 30 படம் வெளியாகும் போது சர்ச்சைகள் கிளம்பலாம் என திரையுலகில் பேச்சு உள்ளது.